உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் புவனகிரி மேற்கு ஒன்றியம் சார்பில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் இளஞ்செழியன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராசு முன்னிலை வகித்தனர். ஜெயசீலன் வரவேற்றார்.மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பணிகள் குறித்து பேசினார். அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கிருபாகரன் ஆகியோர் பூத் கமிட்டி பட்டியல்களை ஆய்வு செய்தனர்.கூட்டத்தில், முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன், அரங்கசாமி, ஒன்றிய ஜெ.. பேரவை செயலாளர் ராஜாசாமிநாதன், ஒன்றிய பொருளாளர் சங்கர், மகளிரணி தலைவர் ராஜேஸ்வரி, பிரித்தீவி, மணிகண்டன், சிவக்குமார், வேல்முருகன், விநாயகமூர்த்தி, பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை