உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பகுதியில் அ.தி.மு.க., சார்பில் பூத்கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கடலுார் தெற்கு மாவட்டம், கடலுார் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், ராமாபுரம், திருவந்திபுரம், விலங்கல்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் ஓட்டுச்சாவடி வாரியாக கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் நடந்தது.கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கடலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார். அமைப்பு செயலாளர்கள் கோபால், ராஜமாணிக்கம், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பக்தரட்சகன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி குருநாதன், பில்லாலி முன்னாள் ஊராட்சி தலைவர் ஸ்ரீராம், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ