அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
சிதம்பரம்: அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சிதம்பரம் தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பைசல் மஹாலில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட அவை தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுந்தர், இணை செயலாளர் ரெங்கம்மாள், துணை செயலாளர் செல்வம், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், இளைஞரணி செயலாளர் முருகையன், ஐ.டி., விங் செயலாளர் பிரபு, கலை பிரிவு செயலாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், வாக்காளர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட, பல்வேறு விவகாரங்கள் தொடர்பான விரிவான ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினர். கூட்டத்தில், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, அசோகன், ரெங்கசாமி, தமிழரசன், வாசுதேவன், அரிசக்திவேல், வீரமணி, ரவிசந்திரன், செங்குட்டுவன், மணிராஜ், சந்தோஷ், வெங்கடேசன், சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.