மேலும் செய்திகள்
நுாதன முறையில் சாராயம் கடத்திய வியாபாரி கைது
06-Oct-2025
நெல்லிக்குப்பம்; பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் கண்டரக்கோட்டை அடுத்த மேல்குமாரமங்கலம் பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே மொபட்டில் மூட்டைகளு டன் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அவர், நிற்காமல் சென்றதால் போலீசார் துரத்தி சென்று பிடித்து சோதனை செய்தனர். இதில், 100 மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் ஆரியபாளையம் செந்தில் மகன் சிரஞ்சீவி, 23; என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
06-Oct-2025