உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

நெய்வேலி: நெய்வேலியில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர். நெய்வேலியில், அ.தி.மு.க.,, - பா.ம.க., - த.வெ.க,, - அ.ம.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் அ.ம.மு.க., கிழக்கொல்லை ஆனந்த், பா.ம.க., வினித், பத்திரக் கோட்டை பிரகாஷ், ஆண்டிக்குப்பம் மோகன், அருள்முருகன், அரசடிகுப்பம் சுரேஷ், அ.தி.மு.க., ராதாகிருஷ்ணன், எலந்தம்பட்டு அ.தி.மு.க., பாண்டியன், சிறுத்தொண்டமாதேவி சங்கரி, பா.ம.க., வீரமணி மற்றும் சதீஷ் ஆகியோரது தலைமையில் 600க்கும் மேற்பட்டோர் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். நிகழ்ச்சியில், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், பண்ருட்டி தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜா. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராமச்சந்திரன், ஆடலரசன், எம்.ஜி.ஆர்., லட்சுமி நாராயணன், செல்வகுமார், ஐயப்பன், ஆனந்த் ஜோதி. வழக்கறிஞர் அரிதாஸ், சுந்தரவடிவேல், ஜனார்த்தனன், ராஜேந்திரன், லோகநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், நெய்வேலி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை