மேலும் செய்திகள்
பு.முட்லுார் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பரிசு
08-Sep-2025
பண்ருட்டி : பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2000ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பெர்ட்டிலாபோர்ட் செல்வி தலைமை தாங்கினார். எஸ்.பி., ஜெயக்குமார், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், கவுன்சிலர்கள் சோழன், சண்முகவள்ளி பழனி, நகர தி.மு.க., அவை தலைவர் ராஜா, செந்தமிழ்செல்வன், சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Sep-2025