உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கடலுாரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கடலுார்; தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பிறந்த நாளையொட்டி நேற்று காங்., மாநில செயலாளர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கடலுார் மத்திய மாவட்ட தலைவர் திலகர், மாநகர தலைவர் வேலுசாமி, இளைஞர் காங்., மாவட்ட தலைவர் கலையரசன், துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாண்டுரங்கன், மீனவரணி மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ஓ.பி.சி., பிரிவு மாநில செயலாளர் ராமராஜ், செந்தில், சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் பஷீர் அகமது, ஏழுமலை, ராதாகிருஷ்ணன், அன்பழகன், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை