அமெரிக்க வாழ் தமிழ் மாணவி பரத நாட்டியம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், அமெரிக்க வாழ் தமிழ் மாணவியின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. சேத்தியாதோப்பு அடுத்த வெய்யலுாரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மனைவி பிரியதர்ஷினி. அமெரிக்க வாழ் தம்பதி. இவரது மகள் இஷிதா இளஞ்செழியன்,15; இவர், தனது 6 வயதில் இருந்து, அமெரிக்க நியூஜெர்சியில், பரதநாட்டிய குரு ஆச்சாரியா ரம்யா சங்கரனிடம் பரதம் கற்றார். இவர், சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று நடராஜர் முன்பு நாட்டியமாடி வழிபாடு செய்தார். தொடர்ந்து சிதம்பரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில், பரத நாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார். வெய்யலுார் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று மாணவியை பாராட்டினர்.