மேலும் செய்திகள்
மாநில கபடி போட்டி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
26-Aug-2025
கடலுார்: கடலுார் உண்ணாமலைசெட்டி சாவடியில் நடந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் கடலுார் சாவடி அம்மன் பிரதர்ஸ் அணி முதல் பரிசுவென்றது. கடலுார் உண்ணாமலைசெட்டி சாவடியில், அம்மன் பிரதர்ஸ் கபடி குழு சார்பில் கடந்த 24ம் தேதி தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடந்தது. அதில் கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலுார், புதுச்சேரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன. கடலுார் சாவடி அம்மன் பிரதர்ஸ் அணி முதல் பரிசு 35ஆயிரம் ரூபாய் மற்றும் வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது. புதுச்சேரி திருபுவனை அணி இரண்டாம் பரிசு 25ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை வென்றது. காட்டாண்டிகுப்பம் கபடி அணி, மூன்றாமிடத்தை பிடித்தது. போட்டியில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு, கோப்பை வழங்கப்பட்டன.
26-Aug-2025