நடராஜர் கோவிலில் அன்புமணி தரிசனம்
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் பா.ம.க., தலைவர் அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார். பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்ள கடலுார் மாவட்டம், சிதம்பரத்திற்கு நேற்று வருகை தந்தார். அப்போது, நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவரை கோவில் பொது தீட்சிதர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பின், அன்புமணி, கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜரை தரிசனம் செய்தார். அவருக்கு தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து, வெளிப்பிரகாரத்தில் உள்ள காடவராய கோப்பெருங்சிங்கன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.