அன்புமணி சுற்றுப்பயணம் முன்னாள் எம்.எல்.ஏ., தகவல்
விருத்தாசலம் : கடலுார் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல், அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பா.ம.க., தலைவர் அன்புமணி கடலுார் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 6ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அன்று, காலை 11:00 மணிக்கு, சாத்திப்பட்டு கிராமத்தில், முந்திரி, பலா விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மாலை 5:00 மணிக்கு, பண்ருட்டியில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு கடலுாரில் நடைபயணம், பொதுக்கூட்டம் முடித்து, கடலுாரில் இரவு ஓய்வு எடுக்கிறார். 7ம் தேதி காலை 11:00 மணிக்கு, தேவனாம்பட்டிணத்தில் மீனவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு புவனகிரியில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் முடித்து, இரவு சிதம்பரத்தில் ஓய்வு எடுக்கிறார். 8ம் தேதி காலை 11:00 மணிக்கு, வடலுார் வள்ளலார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். மாலை 5:00 மணிக்கு, நெய்வேலி ஆர்ச்கேட்டில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம்; இரவு 7:00 மணிக்கு, விருத்தாசலத்தில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து, வரும் 12ம் தேதி சிதம்பரத்தில் மாலை 5:00 மணிக்கு, நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.