உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்கன்வாடி கட்டடம் இடிந்து விழும் அபாயம்

அங்கன்வாடி கட்டடம் இடிந்து விழும் அபாயம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டடம் பழுதடைந்ததை சரி செய்யாததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியொட்டி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 25 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான உணவை அங்கேயே தயார் செய்து வந்தனர்.அங்கன்வாடி மையம் பழமையான ஓட்டு கட்டடமாக உள்ளது. இதனை சுற்றி புதர்கள் மண்டியும் அருகில் உள்ள மரத்தின் கிளைகள் ஓடுகள் மேல் சாய்ந்தும் உள்ளன. சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.இதை சரி செய்ய வேண்டுமென நகராட்சியில் புகார் அளித்தும் அதிகாரிகளின் ஈகோ பிரச்னையால் நடவடிக்கை எடுக்கவில்லை. வேறு வழியில்லாததால் வாடகை கட்டடத்தின் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அங்கு ஆய்வு பணிக்காக வந்த கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் புதிய கட்டடம் கட்டி தர வேண்டுமென கவுன்சிலர் செல்வகுமார் கோரிக்கை விடுத்தார். பள்ளியில் பயன்படாத கட்டடத்தை சரி செய்து அங்கன்வாடிக்கு ஒப்படைக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி