உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திறப்பு விழா காணாமலேயே அங்கன்வாடி இடித்து அகற்றம்

திறப்பு விழா காணாமலேயே அங்கன்வாடி இடித்து அகற்றம்

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே நீர்நிலையில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 9 லட்சம் ரூபாய் செலவில் அங்கன் வாடி மையம் கட்டப்பட்டது.திறப்பு விழா காணாத நிலையில், நீர்நிலையில் கட்டப்பட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில், அங்கன்வாடி கட்டடத்தை இடித்து அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம், அங்கன்வாடி கட்டடத்தை இடிக்கத் துவங்கினர். அப்போது அங்கு வந்த வி.சி., மாவட்ட செயலர் நீதிவள்ளல், முன்னாள் ஊராட்சி தலைவர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் செல்லதுரை உள்ளிட்ட கிராம மக்கள் பொக்லைனை சிறைபிடித்ததால், இடிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.இந்நிலையில், தாசில்தார் உதயகுமார் தலைமையில், அங்கன்வாடி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை