உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

கடலுார்: கடலுார் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், வரும் 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கடலுார் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 6ம் தேதி வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்குகிறது. 7ம் தேதி அக்னி பிரணயனம் நித்ய ஹோமம், பூர்ணாஹூதி, வேத பிரபந்த சாற்றுமுறையும், மாலை அஷ்டபந்தனம் சமர்பித்தலும் நடக்கிறது.வரும் 8ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சாந்த ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !