கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
நெல்லிக்குப்பம்: கைலாசநாதர் கோவிலில் அன்னாபிேஷக சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம் அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவிலில், நேற்று100 கிலோ அரிசியால் சோறு செய்து கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் செய்து தீபாராதனை செய்தனர். பூஜைகள் முடிந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்த அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். சுவாமிக்கு ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல, எய்தனுார் ஆதி புரீஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், பூலோகநாதர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந் தது.