உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கல்லுாரியில் ஆண்டு விழா

அரசு கல்லுாரியில் ஆண்டு விழா

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வசித்தார். பொருளியல் துறை தலைவர் மகேசன் முன்னிலை வகித்தார்.தமிழ்துறை தலைவர் கருணாநிதி வரவேற்றார்.உடற்கல்வி துறை இயக்குனர் சுரேஷ்குமார், மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.அதைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. வேதியியல் துறை இணை பேராசிரியர் சுந்தரச்செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் தமிழரசி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை