மேலும் செய்திகள்
லட்சுமி சோரடியா பள்ளியில் தியானப் பயிற்சி
24-Dec-2024
சமத்துவ பொங்கல்
14-Jan-2025
கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீலட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.காலையில் மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மாலை பரிசளிப்பு விழா நடந்தது. தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். தாளாளர் அசோக்மல் சோரடியா, முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம், போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயந்தி சோரடியா, ராஜலட்சுமி சோரடியா வாழ்த்தி பேசினர். விழாஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர்கள் லோகேஷ், மைக்கேல்ராஜ் செய்திருந்தனர்.உதவி தலைமை ஆசிரியர் பாத்தாகான் நன்றி கூறினார்.
24-Dec-2024
14-Jan-2025