உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சிதம்பரம் அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் சேர விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது என, கல்லுாரி முதல்வர் லலிதா கூறியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:2025-2026ம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் வரும் 27ம் வரை விண்ணப்பிக்கலாம். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் சேர https://www.tngasa.inஎன்ற ஒருங்கிணைந்த இணையம் மூலம் ஒரே விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதில், விண்ணப்ப பதிவு, கட்டணம், பாடப்பிரிவுகள் தேர்வு செய்தல், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்தல் மேற்கொள்ளலாம்.நடப்பு கல்வியாண்டில் (2025-2026) பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.ஏ., பொருளாதாரம் (தமிழ் வழி, ஆங்கில வழி), பி.காம்., பி.பி.ஏ., (ஆங்கில வழி), பி.எஸ்.சி., கணிதம் (தமிழ் வழி, ஆங்கில வழி), புள்ளியல், இயற்பியல், வேதியல், தொழில் முறை வேதியியல் (ஆங்கில வழி), தாவரவியல் (தமிழ் வழி, ஆங்கில வழி), கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது.சுழற்சி 2ல்- பி.ஏ., தமிழ், பி.பி.ஏ., இயற்பியல், வேதியியல், தாவர வியல் (ஆங்கில வழி) ஆகிய புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ