உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டேபிள் டென்னிஸ் பயிற்றுநர் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

டேபிள் டென்னிஸ் பயிற்றுநர் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார் : டேபிள் டென்னிஸ் பயிற்சி மையத்திற்கு பயிற்றுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு பயிற்சி மையத்தை கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சேர 12வயது முதல் 21வயது வரை உள்ள 20 மாணவர்கள், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு, ஒவ்வொரு மாதமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கப்படும். மாத ஊதியம் 25,000 ரூபாயில் பயிற்றுநர் ஒருவர் நியமிக்கப்படஉள்ளார். என்.ஐ.எஸ்.,ரெகுலர் (டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் 10 மாதங்கள் அல்லது லைசன்ஸ் கோர்ஸ் 6 மாதச் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள்) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மாவட்டவிளையாட்டு அலுவலர் (மொபைல் எண்- 7401703495) அலுவலகத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாவட்டவிளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப்பயிற்சிமையத்தில் சேர ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு அண்ணாவிளையாட்டு அரங்கில் நடைபெறும் தேர்வில் நேரடியாக உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை