நியமனம்
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தை சேர்ந்த திலகர் காங்., மத்திய மாவட்ட தலைவராக உள்ளார். இவர், தமிழ்நாடு டெலிபோன் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக பரிந்துரை செய்த கடலூர் தொகுதி எம்.பி.விஷ்ணுபிரசாத்தை சந்தித்து திலகர் வாழ்த்து பெற்றார். காங்., நகர தலைவர் ரவிக்குமார். வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம், சமூக ஆர்வலர் குமரவேல் உட்பட பலர் திலகரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.