உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், பரங்கிப்பேட்டை ஒன்றியளவில் ஓய்வு பெற்ற 11 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.வட்டார கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்ரி முன்னிலை வகித்தனர். கோவிலாம்பூண்டி பள்ளி தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி வரவேற்றார்.பணி ஓய்வு பெற்ற உதயராஜ், லட்சுமணன், சத்யநாராயணன், செல்வ மதி, பாமா, லலிதா புஷ்பலதா, இளவரசி, ஜல்சாட்சி, ஜெகஜோதி, விஜய லட்சுமி ஆகிய 11 ஆசிரியர்களுக்கு, பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.பரங்கிப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சுபத்ரா தேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை