உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாணவர்களுக்கு பாராட்டு விழா

 மாணவர்களுக்கு பாராட்டு விழா

சேத்தியாத்தோப்பு: மாநில செஸ் போட்டியில் வென்ற சிதம்பரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ் .இ., பள்ளியில், தமிழ்நாடு மாநில அளவிலான, ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய குழந்தைகளுக்கான செஸ் போட்டி நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற குழந்தைகள் சிறப்பாக விளையாடி வென்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சரவணன், பயிற்சியாளர் தினேஷ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, பரிசுகள், கேடயங்கள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி