மேலும் செய்திகள்
கொத்தட்டை ஊராட்சியில் பணி நிறைவு பாராட்டு விழா
06-Jan-2025
புவனகிரி: புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு, அரசு பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் பதவி முடிந்ததையடுத்து, ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் பணியை பாராட்டி, பாராட்டு விழா அப்பகுதி பள்ளி வளாகத்தில் நடந்தது. கிராம நிர்வாகி பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியை அல்போன்னிஸாமேரி வரவேற்றார். தலைமையாசிரியர் ராஜாராமலிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில் ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள், துப்புர ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சத்தியபாமா நன்றி கூறினார்.
06-Jan-2025