மேலும் செய்திகள்
காடுபட்டி மாணவிகள் முதலிடம்
15-Jul-2025
பரங்கிப்பேட்டை,: குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2025-2026ம் ஆண்டிற்கான குறுவட்ட போட்டி நடந்தது. இப்போட்டியில், பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இறகுப்பந்து மற்றும் பூப்பந்து போட்டியில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடமும், தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்றனர். நீளம் தாண்டும் முதலிடம் மற்றும் தொடர் ஓட்டம் போட்டியில் மூன்றாமிடம் பிடித்தனர். சாதனைப்படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் கலையரசி தலைமை தாங்கினார். வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு துணை சேர்மன் முகமது யூனுஸ் பாராட்டி, பரிசு வழங்கினார். விழாவில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மணி, நன்றி கூறினார்.
15-Jul-2025