உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அருணாச்சலா பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

அருணாச்சலா பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

கடலுார: குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.குறிஞ்சிப்பாடி அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் தீபக்ராஜா, மாணவி கிருத்திகா 490 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், மாணவி தாரிகா தனஸ்ரீ 488 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் சஞ்சய் 483 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். அறிவியல் பாடத்தில் தீபக்ராஜ், கிருத்திகா, தாரிகா, தனஸ்ரீ, கிரண்யா, சகானா, சந்தியா, பூமாறன், கிருத்திகா, பிரவின் ராஜ், பிரின்ஸ், பிரதீப் ஆகியோரும், சமூக அறிவியல் பாடத்தில் தீப்சிகா, ஹரிபிரியா, அனுஷ்கா, ஆஷிகா, அனுஜா ஆகியோரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். சாதனை மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. செயலர் சட்டநாதன், நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். சாதனை மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளி இயக்குனர்கள், நிர்வாக அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் அபிராமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ