உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அப்ரண்டிஸ் மாணவி தற்கொலை

அப்ரண்டிஸ் மாணவி தற்கொலை

நெய்வேலி; என்.எல்.சி.,யில் அப்ரண்ட்டிஸ் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19ல் உள்ள அரவிந்தர் சாலையில் என்.எல்.சி., குடியிருப்பில் வசித்து வந்தவர் செங்குட்டுவன் மகள் அஞ்சலை,22; ஐ.டி.ஐ. எலக்டரிக்கல் படித்த இவர், என்.எல்.சி.,- என்.என்.டி.பி.எஸ்., அனல் மின் நிலையத்தில் அப்ரண்டிஸ் பெற்று வந்தவர், நேற்று மதியம் அவர் தங்கியிருந்த வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் அஞ்சலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை