உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

விருத்தாசலம்: மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.விருத்தாசலம் புதுக்குப்பம் தங்கராசு மகன் பிரகாஷ், 36. இவரது மனைவி ரம்யா. இருவருக்கும் நேற்று முன்தினம் மாலை குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. வெளியே சென்ற பிரகாஷ் மதுபோதையில் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை என்பதால் மனைவி ரம்யா, அவரது உறவினர்களுடன் சென்று தேடிப்பார்த்தார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது.பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, துப்பட்டாவில் துாக்குபோட்ட நிலையில் பிரகாஷ் இறந்து கிடந்தார். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ