உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் அரிஸ்டோ பள்ளி மாணவர் சாதனை

ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் அரிஸ்டோ பள்ளி மாணவர் சாதனை

கடலுார்; கடலுார் அரிஸ்டோ பள்ளி மாணவர், ஜே.இ.இ.,அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர் சஞ்சய். இவர் கடந்த மாதம் நடந்த ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்று, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கு தகுதி பெற்றார். அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர் சஞ்சயை, பள்ளி தலைவர் சிவகுமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி சிவகுமார், பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ