ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவி சாதனை
கடலுார்: செங்கல்பட்டில் நடந்த சி.பி.எஸ்.இ., தெற்கு பிராந்திய அளவிலான விளையாட்டுப்போட்டியில் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். சி.பி.எஸ்.இ., தெற்கு பிராந்திய அளவிலான விளையாட்டுப்போட்டிகள், செங்கல்பட்டு கோகுலம் பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில் 17வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான குத்தச்சண்டை போட்டியில், கடலுார் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவி பிரியங்கா வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.