பண்ருட்டி சாராய வழக்கு 23 ஆண்டுக்கு பின் கைது
பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஒறையூர், மேல்அருங்குணம், நத்தம், மணம்தவிழ்ந்தபுத்துார் ஆகிய கிராமங்களில் கடந்த 2001 நவம்பர் 29ம் தேதி விஷசாராயம் குடித்து 53 பேர் பலியாகினர். பலருக்கு கண் பார்வை பாதித்தது.புதுப்பேட்டை போலீசார், விஷ சாராய விற்பனையில் ஈடுபட்டதாக, 22 பேர் மீது வழக்கு பதிந்து, எட்டு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் இறந்துவிட்டனர்.இவ்வழக்கு கடலுார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கோர்ட் உத்தரவில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் என்ற தோஜா ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.திருப்பூர் அம்பேத்கர் நகர் ரயில்வே காலனியை சேர்ந்த இவர், திருப்பூரில் மளிகை கடையில் வேலை பார்ப்பதாக தகவல் கிடைத்தது. அதன் படி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் திருப்பூர் சென்று, தோஜா ஆனந்தை, 58, கைது செய்தனர்.