உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயின்ட் ஜோசப் பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம்

செயின்ட் ஜோசப் பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம்

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் கலைத்திருவிழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுரேஷ்ராஜன் வரவேற்றார். பாலர் பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாலன் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப்பேசினார். வளனார் இன்னிசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமையாசிரியர்கள் சார்லி பெலிக்ஸ், வில்லியம்ஸ், ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். விழாவை தமிழாசிரியர் பால்ராஜ், கலைவளர் மன்ற செயலர் டேவிட்ராஜ், சாரண செயலர் செல்வநாதன் ஒருங்கிணைத்தனர். தமிழாசிரியர் ஜான்பிரிட்டோ நன்றி கூறினார். ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் விழாவை கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ