ஆறுமுக நாவலர் பள்ளிக்கு ரூ. 10 லட்சத்தில் இருக்கைகள்
சிதம்பரம்; சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளிக்கு எம்.பி., மேம்பாடு நிதியில் இருந்து, ரூ. 10 லட்சம் மதிப்பில் மேசை, நாற்காலிகளை சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் வழங்கினார்.சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி மாணவர்களின், பயன்பாட்டிற்கு, மேஜை நாற்காலிகள் தேவை என சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியனிடம், பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, அ.தி.மு.க., எம்.பி., சண்முகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு, அவரது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் மேஜை - நாற்காலிகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் டாக்டர் அருள்மொழிசெல்வன் தலைமை தாங்கினார். பள்ளிக்கு குழு தலைவர் சேது சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் பங்கேற்று, மேஜை, நாற்காளிகளை பள்ளிக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற தலைவர் குமார், செந்தில்குமார், சண்முகம், தில்லை கோபி, ரவி, ரெங்கம்மாள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.முதுகலை ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.