உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிள்ளை பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அச்சம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிள்ளை பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அச்சம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிள்ளை: கிள்ளை சின்ன ஆற்று மதகு பாலத்தில் இரு இடங்களில் விரிசல் ஏற்பட்டு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீர்செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிதம்பரத்தில் இருந்து கிள்ளைக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை செல்கிறது. கிள்ளையில் இருந்து பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம், முடசல் ஓடை மீன்பிடி இறங்குதளம் மற்றும் பரங்கிப்பேட்டைக்கு தனித்தனியாக நெடுஞ்சாலைத்துறை சாலை செல்கிறது. இதனால், சிதம்பரம்- கிள்ளை நெடுஞ்சாலை சாலை எப்போதும் பிசியாகவே காணப்படும். மேலும் பரங்கிப்பேட்டை மற்றும் முடசல் ஓடை மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு மீன் வகைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், உள்ளூர் வியாபாரிகளின் வாகனங்கள் என அனைத்தும் கிள்ளை சின்ன ஆற்று மதகு பாலத்தின் வழியாக அதிகளவில் வந்து செல்கிறது. தற்போது பாலத்தின் இரண்டு இடங்களில் அதாவது பாலத்தின் மீது போடப்பட்டுள்ள சிமென்ட் தளம் இணைப்பு பகுதியில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பாலத்தின் மேல் இருந்து அடிப்பகுதி வரை இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளதால் பாலத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் சிறிய செடி ஒன்று முளைத்து, அது மரமாக வளர்ந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பாலத்தின் இருபுறமும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் விரிசலை உடனடியாக சீர்செய்ய சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை