உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பண்ருட்டி; பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில், பதவி உயர்வு வழங்க கோரி உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் 14 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு, நிரந்தர உதவி பேராசிரியர்களாக 15 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு வழங்கவில்லை என, தெரிகிறது.பண்ருட்டி பனிக்கன்குப்பம் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் பணிபுரியும் 30 நிரந்தர உதவி பேராசிரியர்கள், பதவி உயர்வு வழங்காததை கண்டித்து நேற்று மாலை 5:00 மணிக்கு கல்லுாரி முடிந்த பின் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். இரவு வரை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ