மேலும் செய்திகள்
வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
24-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் வாயிலில், காதல் தம்பதியை பெண்ணின் பெற்றோர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சித்தேரிகுப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி மகள் சந்தியா,19; ஈரோட்டில் உள்ள பஞ்சு மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஊர் திரும்பியவரை 25ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து முனுசாமி அளித்த புகாரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சந்தியா, பெரியகண்டியாங்குப்பத்தை சேர்ந்த காதலர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, நேற்று பாதுகாப்பு கோரி விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்க வந்தார். அப்போது, நுழைவு வாயிலில் நின்றிருந்த சந்தியாவின் குடும்பத்தினர், சதீஷிடம் தகராறு செய்து, இருவரையும் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. உடன், போலீசார், காதல் தம்பதியை மீட்டனர். சந்தியா விருப்பத்தின் பேரில், அவரை சதீஷூடன் போலீசார் அனுப்பி வைத்தனர். காதல் தம்பதியை தாக்கியதாக சந்தியாவின் சகோதரிகள் செல்வமணி மனைவி மீனா, 32; கவியரசன் மனைவி லேனா, 35; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Jul-2025