உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏட்டு மீது தாக்குதல்: வாலிபர் கைது

ஏட்டு மீது தாக்குதல்: வாலிபர் கைது

திட்டக்குடி: திட்டக்குடியில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுவை, போதையில் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிபவர் திருசங்கு, 37; இவர், நேற்று முன்தினம் இரவு, பாக்கியராஜ் என்ற போலீஸ்காரருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திட்டக்குடி அரசு கல்லுாரி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக 4 பேரிடம் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது போதையில் இருந்த புலிவலம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் விக்னேஷ்,24, என்பவர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஏட்டு திருசங்குவை தாக்கி, அவரது கை கடிகாரத்தை உடைத்துள்ளார். காயமடைந்த திருசங்கு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை