உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தம்பதி மீது தாக்கு 15 பேருக்கு வலை

தம்பதி மீது தாக்கு 15 பேருக்கு வலை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தம்பதியை தாக்கிய 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்தவர்கள் புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வசித்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து, தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த கே. பஞ்சங்குப்பம் ரோட்டுதெருவை சேர்ந்த சித்ரா, பன்னீர், செல்வி, ராஜி, கலைமதி, விஜயா, கிருஷ்ணன், பழனிவேல், சதீஷ், ஏகாம்பரம் உட்பட 15 பேர், மணிகண்டனை தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவி தேவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த இருவரும், சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேவி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சித்ரா உட்பட 15 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ