உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊர்வலம் செல்ல முயற்சி; பெண்ணாடத்தில் 6 பேர் கைது

ஊர்வலம் செல்ல முயற்சி; பெண்ணாடத்தில் 6 பேர் கைது

பெண்ணாடம்; சென்னை அண்ணா பல்கலை., மாணவி பலாத்காரம் தொடர்பாக, பெண்ணாடத்தில் முட்டி போட்டு ஊர்வலமாக செல்ல முயன்ற 2 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில், சென்னை அண்ணா பல்கலை., மாணவியை பலாத்காரம் செய்தவர்களை துாக்கிலிட கோரியும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவும், தேரடியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை முட்டி போட்டு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி, 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை