உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூரில் 3 இடங்களில் திருட முயற்சி

வேப்பூரில் 3 இடங்களில் திருட முயற்சி

வேப்பூர்: வேப்பூரில் 3 இடங்களில் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேப்பூர் அடுத்த என்.நாரையூரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர், வேப்பூரில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் 2 வீடுகளில் பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையைச் சேர்ந்த பழனிவேல், 58, கள்ளக்குறிச்சி மாவட்டம், வேங்கைவாடியைச் சேர்ந்த சக்திவேல், 49, தங்கி வேலைக்கு செல்கின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை காரணமாக 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு , தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர்.நள்ளிரவில் மர்மநபர்கள், 2 வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். வீட்டில் பணம், நகை இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல், வேப்பூர் கூட்டுரோட்டில் கார்த்திக் என்பவரின் அரிசி மண்டி பூட்டை உடைத்து திருட முயன்றனர்.சம்பவ இடங்களை பார்வையிட்ட வேப்பூர் போலீசார், மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !