மேலும் செய்திகள்
தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
25-Dec-2024
திட்டக்குடி; திட்டக்குடியில் ஜீவா ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாராயணன், இப்ராஹிம், சுரேஷ், ஞானசேகர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் முருகையன், இந்திய கம்யூ., மங்களூர் ஒன்றிய செயலாளர் உலகநாதன், நல்லுார் ஒன்றிய செயலாளர் கடவுள், ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குவது. ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் குறைந்தபட்சம் 5 ஆயிரம் வழங்குவது. இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய், விபத்துக்கு 5 லட்சம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
25-Dec-2024