உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்ட்ரல் ரோட்டரி சங்கத்திற்கு விருது

சென்ட்ரல் ரோட்டரி சங்கத்திற்கு விருது

சிதம்பரம் : கும்பகோணத்தில் நடந்த ரோட்டரி மாவட்ட விருது வழங்கும் விழாவில், சிதம்பரம் சென்ட்ரல் சங்கத்திற்கு 27 விருதுகள் வழங்கப்பட்டன. கும்பகோணத்தில் ரோட்டரி மாவட்டம்-2981ன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரனுக்கு 'பெஸ்ட் பிரெசிடென்ட் கோல்டு அவார்ட்ஸ்' மற்றும் சங்க செயலாளர் ஏகாம்பரத்திற்கு 'சிறந்த செயலாளர் விருது' என மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாஸ்கரன், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் கோவிந்தராஜ், மண்டல துணை ஆளுநர் திருஞானசம்பந்தம் ஆகியோர் விருதுகள் வழங்கினர். விழாவில், பொருளாளர் சஞ்சீவ்குமார், சாசனத் தலைவர் முஹம்மது யாசின், முன்னாள் நிர்வாகி பன்னலால் ஜெயின், முன்னாள் தலைவர் நடனசபாபதி, பொருளாளர் அருள், ராஜா, வருங்கால செயலாளர் புகழேந்தி, பொருளாளர் கோவிந்தராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை