உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிராமணர் சங்கத்திற்கு விருது வழங்கல்

பிராமணர் சங்கத்திற்கு விருது வழங்கல்

கடலுார் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் மஞ்சக்குப்பம் கிளைக்கு சிறந்த சங்க செயல்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 45வது மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்தது. மாநிலத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் ஆண்டறிக்கையும், பொருளாளர் நரசிம்மன் வரவு-செலவு கணக்கும் வாசித்தனர். கூட்டத்தில், சிறந்த சங்க செயல்பாட்டிற்கான விருது கடலுார், மஞ்சக்குப்பம் கிளைக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை கிளைத் தலைவர் திருமலை பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !