உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சேர்மனுக்கு விருது

என்.எல்.சி., சேர்மனுக்கு விருது

நெய்வேலி : என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளிக்கு, 'மக்கள் மீது அக்கறை கொண்ட தலைமை நிர்வாக அதிகாரி' என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்ப்பட்டது.ஹரியானாவின், தி லீலா ஆம்பியன்ஸ் குருகிராமில். தி எக்னாமிக் டைம்சின் இ.டி. ஹெச்.ஆர். வோர்ல்ட் மற்றும் ஹெச்.ஆர்., வெர்டிகல் விருது வழங்கும் விழா நடந்தது. இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகின்றது.இவ்வாண்டின் 'மக்கள் மீது அக்கறை கொண்ட தலைமை நிர்வாக அதிகாரி' என்ற உயரிய விருதுக்கு என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தேர்வு செய்யப்பட்டார்.இந்த விருது, என்.எல்.சி., நிறுவனத்தின், மக்கள் மேம்பாட்டை மையமாகக் கொண்ட தலைமைத்துவ கலாசாரத்தை வளர்ப்பதில் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஆற்றிய தொலை நோக்குடன் கூடிய, தனித்தன்மை வாய்ந்த அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ