உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லண்டன் மாநாட்டில் விருதை டாக்டர் பங்கேற்பு

லண்டன் மாநாட்டில் விருதை டாக்டர் பங்கேற்பு

கடலுார்; லண்டனில் நடந்த பொருளாதார முதலீட்டாளர் மாநாட்டில் விருத்தாசலம் டாக்டர் பங்கேற்றார்.லண்டனில் இன்ஸ்டிடியூட் ஆப் டைரக்டர்ஸ் சார்பில் பொருளாதார முதலீட்டாளர் மாநாடு கடந்த 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை நடந்தது. இதில், இந்தியாவின் பிரதிநிதியாக விருத்தாசலம் டாக்டர் அரவிந்த் 6வது முறையாக பங்கேற்று பேசினார்.பன்னாட்டு பிரமுகர்கள், லண்டன் முன்னாள் அமைச்சர் பேரோனஸ் வர்மா, இந்திய அரசின் மத்திய நிதி செயலாளர் நாகராஜூ, இந்திய அரசின் முன்னாள் செயலாளர் சைலேஷ் உட்பட பல்வேறு நாடுகளின் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலையில் நடந்த கடைசி நாள் மாநாட்டில் பேசினார்.மாநாட்டில் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு, திறன் மேம்பாடு, விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை சுரங்கச்சூளை புனரமைப்பு ஆகிய திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை