மேலும் செய்திகள்
அழகர்கோவிலில் பக்தர்கள் கூட்டம்
30-Dec-2024
சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, மேலவீதியில், பெல்காம் அனந்தம்மாள் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது. தேர் மற்றும் தரிசன விழாவையொட்டி, 11, 12, 13 ஆகிய தினங்களில், காலை முதல் இரவு வரை 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தின் போது தருண்ராதித்ராவின் கர்நாடக இசை கச்சேரி நடைபெற்றது. இசைக் கச்சேரி நிகழ்த்திய தருண்ராதித்ராவிற்கு, அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் 'சங்கீத சுதாகரா' என்ற பட்டம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் கனகசபை, ஆச்சாள்புரம் கிஷோர் குமார், காட்டுமன்னார்கோவில் செந்தில்குமார், முட்லூர் ராமச்சந்திரன், ஆகியோர் செய்திருந்தனர்.
30-Dec-2024