இயற்கை விவசாயம் குறித்து மாணவிகள் விழிப்புணர்வு
விருத்தாசலம் : முருகன்குடி கிராமத்தில் வேளாண் கல்லுாரி மாணவிகள் சார்பில் இயற்கை விவசாய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி, இறுதியாண்டு மாணவிகள் சார்பில் முருகன்குடி கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முன்னோடி விவசாயி முருகன் துவக்கி வைத்தார்.வேளாண் மாணவிகள் நித்யஸ்ரீ, நித்யா, நித்திஷா, நிவேதா, பிரதீபா, நித்யா, பிரணவி ஆகியோர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். அப்போது, இயற்கை வேளாண் முறைகள், ரசாயண உரங்கள் தவிர்ப்பு, மண் வளம் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.