விழிப்புணர்வு முகாம்
கடலுார்: கடலுார் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு அலுவலக வளாகத்தில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் வரவேற்றார். இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் திருமலை, பேராசிரியர் நடராஜன், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி நடராஜன், அருள்ஜோதி, மாணிக்கவாசகம் வாழ்த்திப் பேசினர். டாக்டர் பானுப்பிரியா, முதியோர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பயிற்சியின் மூலம் உடல் நோய்களை சரி செய்தல், உணவு கட்டுப்பாடு குறித்து பேசினார். இயன்முறை சிகிச்சை நிபுணர் அனிதா, திட்ட நிர்வாகி ஷமீதா, பாஸ்கர், உதவி தலைவி விஜயா, சந்திரா, உதவி செயலாளர் தர்மராஜ், பொருளாளர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.