உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ேஹாட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம், மங்கலம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்தது.இதில், வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வை யாளர் செல்லதுரை தலைமையில், சுகாதார ஆய்வா ளர்கள் முருகவேல், கார்த்தி கேயன், ராஜ்மோகன், முல்லைநாதன், அவினாஷ், பரத் ஆகியோர் கொண்ட குழுவினர், மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ேஹாட்டல்களுக்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழுநோய் பரிசோதனை செய்தனர்.மேலும், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி