உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விழிப்புணர்வு  பிரசாரம் 

 விழிப்புணர்வு  பிரசாரம் 

சேத்தியாத்தோப்பு: ஜன. 30-: சேத்தியாத்தோப்பில் வருவாய்த்துறை சார்பில் தேசிய வாக்காளர் தின கலைநிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புவனகிரி வருவாய்த்துறை சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளுடன் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேத்தியாத்தோப்பு பஸ்நிலையம், கடைவீதி, ராஜீவ்காந்தி சிலை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் அன்பழகன் தலைமை தாங்கி கலைநிகழ்ச்சியை துவக்கி வைத்தார். துணை தாசில்தார் பழனி, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கமல்ராஜ், வி.ஏ.ஓ., அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைநிகழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பது அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ