உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவிகளுக்கு விழிப்புணர்வு

மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பெண்ணாடம்: பெண்ணாடம் போலீஸ் நிலையம் சார்பில், அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை சற்குணாம்பிகை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள், போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், ஆன்லைன் மோசடி, சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்பு ஆகியன குறித்து, சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ